“அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்” – தமிழக டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை!

“அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்” – தமிழக டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை!

டிச.1 முதல் பார்களை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை என்றால் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

“அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்” – தமிழக டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை!

கொரோனா பாதிப்பால் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூட கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு, படிபடியாக அளிக்கப்பட்ட தளர்வுகளின் போது கோவில்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், பார்களை திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 8 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பார்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

“அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்” – தமிழக டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை!

இந்த நிலையில், பார்களை திறக்க அனுமதி அளிக்கக்கோரி மேலாண்மை இயக்குனரை சந்தித்து பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பேசிய தமிழக டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கத் தலைவர், 8 மாதங்களாக பார்கள் மூடப்பட்டு இருப்பதால் வாடகை செலுத்தக் கூட வழியில்லாமல் கடன் வாங்கி வாடகையை செலுத்துகிறோம். இரண்டு முறை நேரில் சென்று மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் அனுமதி அளித்த அரசு, பார்களை மட்டும் ஏன் திறக்க அனுமதி வழங்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், டிச.1 முதல் பார்களை திறக்க அனுமதி வழங்கவில்லை என்றால் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.