மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய அனுமதி இல்லை!

மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய அனுமதி இல்லை!

புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தன்று கடற்கரையிலோ, நதிக்கரையிலோ புனித நீராடி முன்னோர்களை வழிபடுவது வழக்கம். தை, ஆடி அமாவாசை நாட்களை போன்று புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை – ஐயும் பல்வேறு இடங்களில் விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா பரவலால் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தாலும் நதிக்கரைகளில் அமர்ந்து திதி தர்ப்பணம் செய்யவும், நீராடவும் தொடர்ந்து தடை இருந்து வருகிறது.

மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய அனுமதி இல்லை!

இந்நிலையில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் வரும் 17.09 .2020 மகாளய அமவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.