கட்சியின் அடிமட்டத்தில் மாற்றம் செய்யுங்க… இல்லைன்னா கேரளாவில் காங்கிரஸ் இருக்காது.. தாரிக் அன்வர்

கட்சியின் அடிமட்டத்தில் மாற்றம் செய்யுங்க… இல்லைன்னா கேரளாவில் காங்கிரஸ் இருக்காது.. தாரிக் அன்வர்

கேரளாவில் கட்சியின் அடிமட்டத்தில் மறுசீரமைப்பு செய்வது அவசியம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்.

கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் 6 மாநகராட்சிகள், 941 கிராம பஞ்சாயத்துக்கள், 14 மாவட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் 87 நகராட்சிகள் உள்பட 1,200 உள்ளூர் சுயராஜ்ய அமைப்புகளில் உள்ள மொத்தம் 21,893 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான இடதுசாரி கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்தது. மேலும் முந்தைய உள்ளாட்சி தேர்தலை காட்டிலும் தற்போது வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

கட்சியின் அடிமட்டத்தில் மாற்றம் செய்யுங்க… இல்லைன்னா கேரளாவில் காங்கிரஸ் இருக்காது.. தாரிக் அன்வர்
தாரிக் அன்வர்

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை, உள்ளாட்சி தேர்தல் தோல்வி தொடர்பாக ஆய்வு செய்ய பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் தலைமையில் ஒரு குழு ஒன்றை கேரளாவுக்கு அனுப்பியது. கேரளா சென்ற தாரிக் அன்வர் தலைமையிலான குழு, தேர்தல் தோல்வி தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தியது. அதன்பிறகு தாரிக் அன்வர் தலைமையிலான குழு தனது அறிக்கையை கட்சி தலைமையிடம் அளித்துள்ளது.

கட்சியின் அடிமட்டத்தில் மாற்றம் செய்யுங்க… இல்லைன்னா கேரளாவில் காங்கிரஸ் இருக்காது.. தாரிக் அன்வர்
காங்கிரஸ்

கேரளாவில் மாவட்டம் முதல் ஒன்றியம் வரை கட்சியின் அமைப்புகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கட்சி தலைமையிடம் தாரிக் அன்வர் பரிந்துரை செய்துள்ளதாக அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் காங்கிரஸ் தனது பாரம்பரிய வாக்கு வங்கியை மீண்டும் கைப்பற்ற வேண்டும். வயநாடு எம்.பி. ராகுல் காந்தி கேரளா மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.