இந்திய எல்லையில் கிராமத்தை உருவாக்கும் சீனா.. ராஜீவ் காந்திதான் காரணம்.. பா.ஜ.க. பதிலடி..

 

இந்திய எல்லையில் கிராமத்தை உருவாக்கும் சீனா.. ராஜீவ் காந்திதான் காரணம்.. பா.ஜ.க. பதிலடி..

இந்திய எல்லையில் கிராமத்தை உருவாக்கி வருவது புதிய விஷயமல்ல. ஆனால் இன்று வரை சீனா ராணுவம் இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதற்கு ராஜீவ் காந்தி தலைமையிலன முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று பா.ஜ.க. எம்.பி. தெரிவித்தார்.

இந்தியாவின் அருணாசல பிரதேச எல்லையில் சீனா ஒரு கிராமத்தை கட்டமைத்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டனர். எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு அருணாச்சல பிரதேசம் கிழக்கு தொகுதி பா.ஜ.க. எம்.பி. தபீர் காவ் பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக தபீர் காவ் கூறியதாவது: 1980ம் ஆண்டு முதல் இப்போது வரை அந்த பகுதிகளை சீனா ஆக்கிரமீதித்து வருகிறது.

இந்திய எல்லையில் கிராமத்தை உருவாக்கும் சீனா.. ராஜீவ் காந்திதான் காரணம்.. பா.ஜ.க. பதிலடி..
பா.ஜ.க.

அந்த பகுதியில் சீனா கிராமம் உருவாக்கி வருவது புதிய விஷயம் அல்ல. இந்திய எல்லைக்குள்கீழ் உள்ள மெக்மாஹோன் எல்லையின் உள்பகுதியில் பிசா மற்றும் மாசா இடையே ராணுவ தளத்தை சீனா ஏற்கனவே அமைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசின் தவறான பாலிசி இருந்தது. இருப்பினும் அவர்கள் (சீனா) எல்லை வரை சாலைகளை போடவில்லை. சீனா ஆக்கிரமித்த 3-4 கி.மீட்டர் தூரத்தில் ஒரு இடையக மண்டலத்தை விட்டு சென்றது. புதிய கிராமங்களை உருவாக்குவது ஒரு புதிய விஷயமல்ல.

இந்திய எல்லையில் கிராமத்தை உருவாக்கும் சீனா.. ராஜீவ் காந்திதான் காரணம்.. பா.ஜ.க. பதிலடி..
சீனா உருவாக்கி வரும் கிராமம்

சீன ராணுவத்தை அந்த பகுதியிலிருந்து வெளியேற்ற ஆபரேஷன் பெலிகன் திட்டத்தை இந்திய ராணுவம் பரிந்துரை செய்தது. ஆனால் ராஜீவ் காந்தி இந்த திட்டத்தை ரத்து செய்தார். அதற்கு பதிலாக பெங்ஜிங்குக்கு சென்று வெறுங்கையுடன் திரும்பி வந்தார். 80 ஆண்டு முதல் இன்று வரை சீனார்கள் இந்த பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். ராஜீவ் காந்தியின் ஆட்சியின்போது தவாங்கில் சும்டோராங் சூ பள்ளத்தாக்கை சீனா ஆக்கிமித்தது. ராகுல் காந்தி மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தை சதிசரூரால் கொடுக்க முடியுமா?, அருணாச்சலம் மற்றும் அக்சாய் சின் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்களா என்று நான் கேளி கேட்ட விரும்புகிறேன். பிரமரை எதிர்க்கட்சிகள் கேள் கேட்பதற்கு முன் இதற்கு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.