தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

ஐபிஎல் கொண்டாட்டம் உற்சாகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளின் போட்டியும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொண்டதாக உள்ளதால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து களமாட வருகிறது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் மோதியது. அம்பத்தி ராயுடு நின்று அடித்து சென்னையை வெல்ல வைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸின் இரண்டாம் போட்டியில் மோதியது ராஜஸ்தான் ராயல் அணியுடன். இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை ராஜஸ்தான் பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாம் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு மோதுகிறது. எப்படி இருக்கும் இந்தப் போட்டி?

தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

சென்னை அணி ஒன்றில் வென்று, ஒன்றில் தோற்றிருக்கிறது. அதனால், இன்றைய வெற்றி என்பது அடுத்த போட்டிக்கான ஊக்கமாக இருக்கும். எந்த அணியையும் வெல்லக்கூடிய திறமையான பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்கின்றனர். ஆனால், அவர்களில் டூ பிளஸிஸ், ராயுடு இருவர் மட்டுமே நம்பிக்கை தரும் ஆட்டத்தைத் தருகிறார்கள். இவர்களில் காயத்தால் இரண்டாம் போட்டியில் ராயுடு ஆட வில்லை. இன்று ஆடுவதும் சந்தேகமே. முரளி விஜய் ஓப்பனிங் வீரருக்கு உரிய நம்பிக்கையை வெளிப்படுத்த வில்லை. அதிரடி பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் 4, 33 எனும் ரன்களோடு களம் திரும்பியிருக்கிறார்.

தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

டூ பிளஸிஸ் மட்டுமே மும்பையோடு 58 ரன்களும், ராஜஸ்தானோடு 72 ரன்களும் எடுத்துள்ளார். ராயுடுக்குப் பதிலாக இறக்கப்பட்ட ருத்ராஜ் சென்ற போட்டியில் முதல் பந்தில் டக் அவுட்டானார். கேதர் ஜாதவ் இரண்டாம் போட்டியில்தான் பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அதை அவர் பயன்படுத்தும் முன் டாம் கரண் அவரின் விக்கெட்டை தூக்கி விட்டார்.

தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

தோனி சூழல் கருதி ஆடுகிறார். ஆனாலும் அவர் ராஜஸ்தான் போட்டியில் இறக்கிவிட்ட பேட்டிங் வரிசை கடும் சர்ச்சையைக் கிளப்பியது. சாம் கரன் இறங்கி இரண்டு சிக்ஸர் அடிப்பார் எனும் அளவில் மட்டுமே அவர் மீது எதிர்பார்ப்பு வைக்கலாம்.  ஜடேஜாவுக்கான வாய்ப்பு இன்னும் சரியாக அமையவில்லை. ராஜஸ்தான் போட்டியில் மிக இறுதியில் இறக்கப்பட்டார்.

ஆக, பேட்டிங்கில் ராஜாவாக இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில் காட்டும் அக்கறையின்மையால் சென்னைக்கு பெரிய பின்னடைவே.

தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

பவுலிங் தரப்பில், சாம் கர்ன், தீபக் சாஹர், லுங்கி நிகிடி, சாவ்லா எல்லோருமே நன்றாகவே வீசுகிறார்கள். ஆனாலும், பும்ரா, சுனி நரேன் போல நம்பிக்கை தருவது சாம் கர்ன் மட்டுமே.

தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

டெல்லி அணியைப் பொறுத்தவரை அவர்களின் முதல் போட்டியின் வெற்றிகூட இன்னும் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. பஞ்சாப்தான் வென்றிருக்க வேண்டும். நடுவர்களின் குழப்பத்தால் சூப்பர் ஓவர் வந்து, அதில் டெல்லி வென்று விட்டது என்று விமர்சனம் வைக்கப்படுகிறது. அதனால், நாங்கள் திறமையான டீம்தான் என்பதைக் காட்ட அவர்களுக்கு இன்றைய வெற்றி அவசியம்.

தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

டெல்லியின் முதல் போட்டில்யில் ஸ்ரேயாஸ், மார்கஸ் ஸ்டொயினிஸ், ரிஷப் பண்ட் ஆகியோரே நன்கு விளையாடியிருக்கிறார்கள்.  ஆயினும் ஷிகர் தவான், ஹெட்மேயர் போன்ற நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

பவுலிங் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் காயம் அடைந்திருப்பதால் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். அது அணிக்கு பின்னடைவே. ஏனெனில், சென்ற போட்டியில் ஒரு ஓவர் வீசி இரண்டு ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் கருண் நாயர், பூரன் ஆகிய முக்கிய பேட்ஸ்மேன் விக்கெட்டுகள். ரபோடா, ஸ்டொயினிஸ், மோஹித் ஷர்மா ஆகியோரின் பந்து வீச்சுகளும் எடுபடக் கூடிய நிலையில் உள்ளன.

தோனியா… ஸ்ரேயாஸ் ஐயரா? இரண்டாம் வெற்றியைச் சூடப் போவது யார்? #CSKvsDC #IPL

இன்றைய போட்டியுல் பலமும் பலவீனத்திலும் இரு அணிகளும் சமமாகவே உள்ளன. சென்னை அணியில், முரளி விஜய் மற்றும் வாட்சன் ஆகியோர் முதல் 7 ஓவர்களுக்கு விக்கெட்டை இழந்துவிடாமல் ரன்ரேட் 10 –யை நெருக்கி கொண்டுவந்தால் நல்ல ஓப்பனிங்காக அமையும். வெற்றிக்கும் வாய்ப்பிருக்கிறது.