விஜயபாஸ்கர் அவமரியாதை செய்யவில்லை… தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்!

 

விஜயபாஸ்கர் அவமரியாதை செய்யவில்லை… தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்!

தஞ்சை மருத்துவக் கல்லூரி டீனை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அவமாியாதை செய்தார் என்று வெளியான தகவலை டீன் மறுத்துள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி டீனாக உள்ளவர் மருது துரை. அவர் முதுகை வளைத்து நின்று கொண்டிருக்க அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர், எஸ்.பி உள்ளிட்டவர்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

விஜயபாஸ்கர் அவமரியாதை செய்யவில்லை… தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்!
இது குறித்து சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், “மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி முதல்வரை ஓரமாக நிற்க வைத்து பேசி கொண்டு இருக்கிறார்கள்.

http://https://www.facebook.com/drravindranath/posts/2682720148497100
ஒரு மெடிக்கல் காலேஜ் டீன் எந்த விதத்தில் குறைந்து போனார்? என்ன விதமான மனநிலை இது? இவ்வாறு அவமானப் படுத்தலாமா?.
இதில் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால்… அங்கு அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரையும் விட, நிற்கிற அந்த டீனுக்கு தான், இந்த கொரோனாவை பற்றி கூடுதலாகத் தெரியும். மருத்துவர்களை மதிக்காத ஒரு சுகாதாரத்துறை அமைச்சர்.
மருத்துவர்கள் என்ன கல் குவாரியில் வேலை செய்யும் கொத்தடிமைகளா? அல்லது பண்ணையார்களிடம் வேலை செய்யும் பண்ணையடிமைகளா? கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்ட சமூகம் இது.
கம்யூனிஸ்ட்களால், பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட மண் தஞ்சை மண். மீண்டும் கொத்தடிமை முறையைத் திணிக்க முயல வேண்டாம், மாண்புமிகு அமைச்சர் அவர்களே!” என்று கூறியிருந்தார்.

விஜயபாஸ்கர் அவமரியாதை செய்யவில்லை… தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்!
டீன் அவமரியாதை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வைரலாக பரவியது. இந் தகவலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மருது துரை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த பதிவு தவறானது. நான் வெளியே அடுத்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தேன். அப்போது தஞ்சை மாவட்டத்தில் கொரோனாத் தொற்று தொடர்பான தகவலை அமைச்சர் கேட்பதாக அவரது உதவியாளர் கூறினார். நான் உள்ளே சென்று பதில் அளிக்க முயன்றபோது, அமைச்சர் என்னை அமரச் சொன்னார். நான் வேறு வேறு பணிகள் இருப்பதால், நிகழ்ச்சி தயாரிப்பில் மும்முரமாக இருந்ததால் அமர்வதைத் தவிர்த்துவிட்டு பதில் கூறினேன். கொரோனா பற்றிய அந்த உரையாடல் ஆக்கப்பூர்வமாக, அறிவியல் பூர்வமாக இருந்தது. என்னுடைய செயல்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். எனக்கு எந்த அவமரியாதையும் நிகழவில்லை. கொரோனாவுக்கு எதிராக போராடும் நேரத்தில் நம்முடைய கவனம் சிதறிவிடக் கூடாது” என்றார்.