தஞ்சாவூர்
தஞ்சையில் டெக்கரேஷன் தொழில் செய்து வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஆர்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). டெக்கரேஷன் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நித்யா (33) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், மணிகண்டன் நேற்றிரவு தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள கவிதா (42) என்பவரது வீட்டின் மாடியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தஞ்சை தெற்கு காவல்நிலைய போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக மணிகண்டனின் மனைவி நித்யா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மணிகண்டனுக்கும், கவிதாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் பாதிக்கப்பட்டதால் மணிகண்டன் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், மேலும் கடன் தொல்லை காரணமாக மன அழுத்தத்துடன் இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கவிதா தெரிவித்தா