தஞ்சையில் நாட்டுப்புற கலைஞர்கள் நூதன முறையில் போராட்டம்!

 

தஞ்சையில் நாட்டுப்புற கலைஞர்கள் நூதன முறையில் போராட்டம்!

தஞ்சை

தஞ்சையில் கோவில் திருவிழாக்களில் கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக் கோரி, நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை ரயில் நிலையம் அருகே நடந்த இந்த போராட்டத்தில் நாட்டுப்புற பாடகர்கள், நாடக கலைஞர்கள், நையாண்டி மேள கலைஞகர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, கொரோனா ஊரடங்கினால் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

தஞ்சையில் நாட்டுப்புற கலைஞர்கள் நூதன முறையில் போராட்டம்!

எனவே ஆயிரக்கணக்கான கலைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசின் ஊரங்கு அறிவிப்பில் தளர்வு செய்து, இரவு நேரங்களில் கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கிராமிய கலைஞர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்திய கலைஞர்கள், தப்படித்து நடனமாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.