வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை ரயில் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சையில் ரயில் நிலையம் அருகே விவசாயிகள் ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தின் போது, அவர்கள் விவசாயிகளை அழிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இதனை தொடர்ந்து, போராட்டக்கார்கள் பேரணியாக சென்று ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டக்கார்கள் கலைந்துசென்றனர். இதனால் தஞ்சை ரயில் நிலையம் பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.