“புயலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை” – கண்காணிப்பு அலுவலர்

“புயலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை” – கண்காணிப்பு அலுவலர்

தஞ்சாவூர்

நிவர் புயலையொட்டி தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட சுப்பையன், மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளியேறி பேய்வாரி மற்றும் வெண்ணலோடை வெண்ணாற்றங்கரை பகுதிகளை நேரில் பார்வையிட்டு, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.

“புயலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை” – கண்காணிப்பு அலுவலர்

தொடர்ந்து, பேரிடர் மீட்புக்குழுவினரிடம், பாதிப்புகள் ஏற்டக்கூடிய இடங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

“புயலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை” – கண்காணிப்பு அலுவலர்

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தஞ்சை மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புயல் குறித்த புகார்கள் மற்றும் தகவல்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.