தஞ்சையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பள்ளி, கல்லூரிகளுக்கு அபராதம் விதிப்பு

 

தஞ்சையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பள்ளி, கல்லூரிகளுக்கு அபராதம் விதிப்பு

தஞ்சை

தஞ்சையில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 866 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கோவிந்தராவ் இதனை தொடங்கி வைத்தார்.

தஞ்சையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பள்ளி, கல்லூரிகளுக்கு அபராதம் விதிப்பு

அப்போது, வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சமின்றி பணியாற்றவும், வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தொற்று ஏற்படாதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால், பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கோவிந்தராவ், தஞ்சை மாவட்டத்தில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 16 பள்ளிகள் மற்றும் 4கல்லூரிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட் உள்ளதாகவும் கூறினார்.