தஞ்சை- மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்? – எம்.பி.வைத்திலிங்கம் பதில்

 

தஞ்சை- மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்? – எம்.பி.வைத்திலிங்கம் பதில்

தஞ்சை

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைத்திலிங்கம் கலந்துகொண்டு, அம்மா நகரும் நியாய விலைக்கடை வாகனங்களை கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்த வாகனங்கள் தஞ்சை மாவட்டம்

தஞ்சை- மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்? – எம்.பி.வைத்திலிங்கம் பதில்

திருக்கானூர்பட்டி, சடையார்கோவில், வடக்குபட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பொருட்களை வழங்க புறப்பட்டு சென்றன. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி., வைத்திலிங்கம், விவசாயிகளின்

தஞ்சை- மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்? – எம்.பி.வைத்திலிங்கம் பதில்

நலன் கருதி நெல் கொள்முதலை துரிதப்படுத்தும் செயலை அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், மத்திய பாஜக அரசின் அமைச்சரவையில், அதிமுக அங்கம் வகிக்கும் என்று வெளியாகும் செய்தி தவறானது என்று கூறிய அவர், இதுகுறித்து அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.