தஞ்சை- நெல் கொள்முதல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை – அமைச்சர் காமராஜ்

தஞ்சை- நெல் கொள்முதல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை – அமைச்சர் காமராஜ்

தஞ்சை

நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் குருவாடிப்பட்டியில் உள்ள நெல்கொள் முதல் நிலையத்தில் ஆய்வுமேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

தஞ்சை- நெல் கொள்முதல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை – அமைச்சர் காமராஜ்

மேலும், மற்ற ஆண்டுகளை விட நடப்பாண்டு விளைச்சல் கூடுதலாக உள்ளதாகவும், இந்த குறுவை பருவத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 2.10 லட்சம் மெட்ரிக்டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது ஒரே நாளில் அதிகளவில் அறுவடை செய்யப்படுவதால், கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகமாகி விடுவதாகவும், இதையும் 2 நாட்களில் கொள்முதல் செய்துவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தஞ்சை- நெல் கொள்முதல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை – அமைச்சர் காமராஜ்

மேலும், வரத்து அதிகமாக இருக்கும்போது, தேவைப்பட்டால் அதே ஊரில் மற்றொரு நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், டெல்டா மாவட்டங்களில் 1.86 லட்சம் மெட்ரிக் டன்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நெல் உடனடியாக அரைவைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தஞ்சை- நெல் கொள்முதல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை – அமைச்சர் காமராஜ்

முன்னதாக, கொள்முதல் நிலையம் அருகே கொள்முதலுக்காக கொட்டிவைக்கப்பட்ட நெல்மணிகள் மழையால் நினைந்த நிலையில், அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த விசாயிகள், கடந்த 10 நாட்களாக அங்கு கொட்டிவைத்திருப்பதாகவும், தினமும் மழை பெய்வதால் நெல்லை பாதுகாக்க போராடி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.