Home அரசியல் ’6000 ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது’ தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

’6000 ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது’ தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

ரயில்வே துறையில் பலவித மாற்றங்களைக் கொண்டு வருகிறது மத்திய அரசு. குறிப்பாக, தனியார்மயமாக்குவதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய அரசின் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில், ’கிராமப்புறங்களில், சின்னச் சின்ன ஊர்களில். அந்தப் பகுதிகளில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் எல்லாம் இனி ரயில்கள் நிற்காது என்று அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு. இதன் உள்ளர்த்தம் அந்த ஸ்டேஷன்களையெல்லாம் மூடிவிடுவதே.

இந்த முடிவுக்குக் காரணம், அங்கு பயணிகள் வருகை குறைவாம், அதனால் வருவாயும் குறைவாம். எப்படி இருக்கிறது பாருங்கள்.

ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றால், குறைந்தபட்சம் 50 பேர் ஏற-இறங்க வேண்டுமாம். இதை அளவுகோலாக வைத்து புதிய கால அட்டவணை அதாவது ‘பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணை’ தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ். அதன்படியே குறைவான பயணிகள் ஏறும்-இறங்கும் வருவாய் குறைவான 6,000 ஸ்டேஷன்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றைக் குறைக்கத் திட்டமிடப்பட்டதாம்.

உலகத் தரம் வாய்ந்த பயணத்தை வழங்கவே ரயில்வேயின் மேற்கண்ட திட்டங்களாம். இத்திட்டத்திற்கான நவீன ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுமாம். முதல்கட்டமாக 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்கள் இயக்கப்படுமாம். இத்திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாம். ஒவ்வொரு ரயிலிலும் 16 முதல் 24 பெட்டிகள் வரையில் இருக்குமாம். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில் பறக்குமாம்.

நாடு முழுவதும் தனியார் ரயில்களை இயக்க மும்பை, டெல்லி, சண்டிகார், சென்னை, செகத்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. நமது சென்னை தொகுப்பில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படும். அவை சென்னை – மதுரை, சென்னை – மங்களூர், சென்னை – கோயம்புத்தூர், திருச்சி – சென்னை, கன்னியாகுமரி – சென்னை, சென்னை – புதுடெல்லி, சென்னை – புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்கள்.

Rep Image

மக்களுக்குச் சொந்தமான இவ்வளவு பெரிய பொதுத்துறை நிறுவனத்தைத்தான் தனியாருக்குத் தாரைவார்க்கிறார் மோடி.

குறைவான பயணிகளே வருவதால் வருமானம் குறைவாக உள்ள 6,000 ஸ்டேஷன்களில் இனி ரயில்கள் நிற்காது!

இந்த முடிவும் சரி, ரயில்வே தனியார்மயமும் சரி, தேசத்திற்கும் அதன் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரானதே! இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், ரயிவேயில் மக்களுக்கு எதிரானவற்றை உடனடியாகத் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி’ என்று குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

இதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு

75 நாட்களில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பிரச்சார கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் செய்வார்கள் என்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல்...

3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்

ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த சுந்தரராஜின் மனைவி பத்மா. கணவனுடன் வாழ்ந்த கசக்கிறது என்று சொல்லிவிட்டு, சேலத்தை சேர்ந்த அன்பரசுவுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது சென்று அன்பரசுவுடன் வாழ்ந்துவிட்டு வந்த பத்மா,...

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. கடந்த...
Do NOT follow this link or you will be banned from the site!