‘ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அரசின் முடிவை வரவேற்கிறேன்’ – தமிமுன் அன்சாரி

 

‘ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அரசின் முடிவை வரவேற்கிறேன்’ – தமிமுன் அன்சாரி

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான, தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டங்களால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இளைஞர்களின் உயிருக்கே உலை வைக்கும் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் தலைவர் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.’

‘ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அரசின் முடிவை வரவேற்கிறேன்’ – தமிமுன் அன்சாரி

இதை தொடர்ந்து, பல தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய முடிவு செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவை தான் வரவேற்பதாக மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.