“தமிழர் தலைவர்னு சொல்ல வெட்கமா இல்ல” – கி.வீரமணியை வம்புக்கிழுக்கும் பெ.மணியரசன்!

 

“தமிழர் தலைவர்னு சொல்ல வெட்கமா இல்ல” – கி.வீரமணியை வம்புக்கிழுக்கும் பெ.மணியரசன்!

தமிழ்நாட்டில் ஆரியம் vs திராவிடம் என்ற சித்தாந்த சண்டை தான் பேமஸாக இருந்து வந்தது. சமீப காலமாக திராவிடம் vs தமிழ்த்தேசியம் என்ற சண்டைகள் கிளம்பியிருக்கின்றன. முன்பும் இந்தச் சண்டை இருந்தது தான் என்றாலும் கூட சில வருடங்களாக உக்கிரமாக மாறியுள்ளது. திராவிட இயக்கங்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆற்றிய பங்கினை பட்டியல் போட, தமிழ்த்தேசிய இயக்கங்களும் கட்சிகளும் அதில் குற்றம் கண்டு சுட்டிக்காட்டுகின்றனர்.

“தமிழர் தலைவர்னு சொல்ல வெட்கமா இல்ல” – கி.வீரமணியை வம்புக்கிழுக்கும் பெ.மணியரசன்!
“தமிழர் தலைவர்னு சொல்ல வெட்கமா இல்ல” – கி.வீரமணியை வம்புக்கிழுக்கும் பெ.மணியரசன்!

அந்த வகையில் தமிழ்த்தேசிய பேரியக்க தலைவரான பெ.தமிழரசன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சரமாரியாக விமர்சித்துப் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “வீரமணி என்கின்ற அறிவாலய ஒட்டுத்திண்ணை குடியிருப்பாளர் புதிதாக கிளம்பியிருக்கிறார். அவரது இயக்கத்திற்கு என்ன பேர் தெரியுமா? திராவிட இயக்க தமிழர் பேரவை. இது கருவாட்டு சாம்பார் போல இருக்கிறது. அப்படி தான் இருக்கிறது திராவிடம். அதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே. அப்புறம் எதற்கு தமிழர் என்கிற பெயரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்?

பத்தரை மாதத்து தங்கம் திராவிடர் கழக தலைவர் வீரமணி. அவருக்கு என்ன பட்டம்? தமிழர் தலைவர் வீரமணி. தமிழர் தான் கலப்படம், போலியாச்சே. அந்தப் பட்டத்தை நாங்கள் வைத்துக் கொள்கிறோம். நீங்கள் ஏன் வைத்திருக்க வேண்டும்? கலப்படம் போலி, அந்தப் பட்டம் சரியில்லை. திராவிடம் தான் ஒரிஜினல். ஜெயலலிதாவுக்கு சமூக நீதிகாத்த வீராங்களை என்கிறப் பட்டம் கொடுக்கிற அளவுக்கு திராவிடம் ஒரிஜினல். தமிழர் தலைவராம் வீரமணி. வெட்கம் இல்ல. நீ திராவிடத்தை வைத்துக் கொள். ஆனால் தமிழர் தலைவர் என்கிற பட்டத்தை துறந்து விடு” என்றார்.