• February
    24
    Monday

Main Area

Main



தமிழகத்தின் இரண்டாவது சுயேட்சை வேட்பாளர் திருநங்கை ராதா

திருநங்கை ராதா
திருநங்கை ராதா

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக களம் காண்கிறார் திருநங்கை ராதா. தமிழக தேர்தலில் சுயேட்சையாக நிற்கும் இரண்டாம் திருநங்கை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இந்திய சமூகத்தால் மிக மோசமான ஒடுக்குமுறையை திருநங்கைகள் சந்தித்து வருகின்றனர். கல்வி, அரசியல் என பல துறைகளில் திருநங்கை சமுதாயத்தின் பங்களிப்பு ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகிறது. வெகுசிலரே தடைகளை கடந்து சாதித்து வருகின்றனர்.

அரசியலில் திருநங்கைகளின் பங்களிப்பு மிகவும் குறைவு, 2014-ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா என்பவர் மதுரை நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். 

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

2016-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தேவி எனும் திருநங்கை ஆர்.கே.நகரில் போட்டியிட்டார். ஒரு கட்சியின் வேட்பாளராக ஒரு திருநங்கை முதன்முதலில் அறிவிக்கப்பட்டது இதுவே முதன்முறை.

தேவி

தேவி

இந்நிலையில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக களம் காண்கிறார் திருநங்கை ராதா. அடையாறில் உள்ள மாநாகராட்சி மண்டல தேர்தல் அலுவலகத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ராதா

ராதா

திருநங்கைகள் குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினரிடம் தற்போதுதான் வேரூன்ற துவங்கியுள்ளது. திருநங்கை ராதாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்தி வருகின்றனர்.

இதையும் வாசிங்க

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்

2018 TopTamilNews. All rights reserved.