#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

 

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

தமிழகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அந்த நாள் வந்து விட்டது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப்போகும் தலைவரை தேர்ந்தடுக்கும் பணியை மக்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் பதற்றம் நிலவினாலும், வாக்குப்பதிவு தொய்வின்றி தொடருகிறது.

இதனிடையே, அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே செய்து வருகின்றனர். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், எந்தெந்த அரசியல் பிரமுகர்கள் வாக்களித்துள்ளனர் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…

சென்னை தேனாம் பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் வாக்குச் சாவடியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பேரனுடன் நடந்து வந்து வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது வாக்கை பதிவு செய்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

சேலம் குகை மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் சபாநாயகர் தனபால் வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

தமிழக பாஜக தலைவரும் தாராபுரம் தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

மதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திலாசுப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் தனது மனைவி ரம்யாவுடன் வந்து வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

தமிழக துணை முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான ஓபிஎஸ், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

தமிழக விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி வேட்பாளருமான அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கமணி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் டாடாபாத் பகுதியில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

கேரள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

பால்வளத்துறை அமைச்சரும் ராஜபாளையம் தொகுதி வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

#TamilNaduElections2021 வாக்களித்த அரசியல் தலைவர்கள்!