#Arani அரியர் பாஸ் பண்ண வச்ச எடப்பாடிக்கு தான் ஓட்டு!

 

#Arani அரியர் பாஸ் பண்ண வச்ச எடப்பாடிக்கு தான் ஓட்டு!

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் நமது டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் மனநிலையை அறிந்து வருகிறது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போவது ஆரணி தொகுதி…!

#Arani அரியர் பாஸ் பண்ண வச்ச எடப்பாடிக்கு தான் ஓட்டு!

திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆரணி. இத்தொகுதியில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வந்திருக்கின்றன. ஆரணி தொகுதியில் 2011 தேமுதிக சார்பில் பாபு முருகவேல் வெற்றிபெற்றார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 88,967. 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சேவூர் ராமசந்திரன் 94,047 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதுவரை இங்கு அதிமுக 6 முறையும் திமுக 5 முறையும் , காங்கிரஸ் மற்றும் தேதிமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. ஆரணி தொகுதியில் மொத்தமுள்ள 2,75,063 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 1,41,788 பேரும், ஆண்கள் 1,33,253 பேரும் உள்ளனர். இங்கு திருநங்கைகள் 22 பேர் உள்ளனர்.

#Arani அரியர் பாஸ் பண்ண வச்ச எடப்பாடிக்கு தான் ஓட்டு!

ஆரணி தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் களமிறங்கியுள்ளார். அதேபோல் திமுக சார்பில் எஸ்.எஸ்.அன்பழகன் களம் காண்கிறார். தேமுதிக ஆரணி சட்டமன்றத் தொகுதியில் பாஸ்கரன் போட்டியிடுகிறார்.

#Arani அரியர் பாஸ் பண்ண வச்ச எடப்பாடிக்கு தான் ஓட்டு!

ஆரணி தொகுதி மக்களின் மிகப்பெரிய குறையாக உள்ளது அவர்களின் அடிப்படை பிரச்னைகளை கூட ஆளும் அரசு தீர்த்து வைக்கவில்லை என்பது தான். சாலை முதல் குடிநீர் வரை எந்த அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.ஆரணி தொகுதி அமைச்சர் சேவூர் ராமசந்திரனின் தொகுதியாக உள்ளதால் இங்கு அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதேபோல் திமுகவுக்கும் ஆங்காங்கே மக்கள் ஆதரவு கூறியுள்ளனர். இருபெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மக்கள் நீதி மய்யம் இங்கு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.ஆரணி தொகுதியை குறித்த மக்களின் எண்ணத்தை முழுமையாக அறிய இந்த வீடியோவை பாருங்கள்…!