#Tiruvannamalai அதிமுகவை வறுத்தெடுக்கும் தி.மலை மக்கள்!!

 

#Tiruvannamalai அதிமுகவை வறுத்தெடுக்கும் தி.மலை மக்கள்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி யாருடையது என்பதை தீர்மானிக்கும் இந்த சட்டமன்ற தேர்தலை மக்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர். இந்த தேர்தலில் அதிமுக – பாஜக- பாமக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், அமமுக , நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நடைபெறுகிறது. இந்த சூழலில் நமது டாப் தமிழ் நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் இந்த செய்தியில் நாம் பார்க்க போகும் தொகுதி திருவண்ணாமலை.

திருவண்ணாமலை தொகுதியில் 1991 ஆம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த கண்ணன் வெற்றி பெற்றார் அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 34. 1996 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த பிச்சாண்டி 83 ஆயிரத்து 731 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.2001ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த பிச்சாண்டி மீண்டும் தொகுதியை கைப்பற்

#Tiruvannamalai அதிமுகவை வறுத்தெடுக்கும் தி.மலை மக்கள்!!

றினார் . 2006 ஆம் ஆண்டு திமுக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்ட பிச்சாண்டி 74 ஆயிரத்து 773 வாக்குகள் பெற்றார். 2011 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த எ.வ.வேலு திருவண்ணாமலை தொகுதியில் 84 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.2014 ஆம் ஆண்டும் திமுக வேட்பாளரான எ.வ.வேலு திருவண்ணாமலை தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 484 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி வாகை சூடினார்.திருவண்ணாமலை தொகுதியை பொறுத்தவரையில் கடந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் ஒரு முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

#Tiruvannamalai அதிமுகவை வறுத்தெடுக்கும் தி.மலை மக்கள்!!

2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான எ.வ.வேலு மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் தணிகைவேல் திருவண்ணாமலையில் களம் காண்கிறார்.

#Tiruvannamalai அதிமுகவை வறுத்தெடுக்கும் தி.மலை மக்கள்!!

திருவண்ணாமலை மக்கள் தொகுதி பிரச்னையாக சொல்வது சாலை, குடிநீர் பிரச்னை, சுகாதாரமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதேபோல் நீட் தேர்வினால் தங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை இழந்ததாகவும், 8 வழிச்சாலை உள்ளிட்ட முக்கிய திட்டங்களும் அதிமுக அரசின் மீதான அதிருப்திக்கு காரணம் என்றும் கூறியுள்ளனர்.ஒட்டுமொத்த திருவண்ணாமலை தொகுதியில் திமுகவுக்கே அமோக ஆதரவு உள்ளது. திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.திருவண்ணாமலை தொகுதியில் மக்களின் எண்ண ஓட்டம் என்ன? அவர்களின்ஆதங்கம் என்ன என்பதை முழுமையாக இந்த வீடியோவில் காணுங்கள்.