கறுப்பாடுகள் காய்கறி விலையை ஏற்றியுள்ளன : வணிகர் சங்கம் கண்டனம்!

கறுப்பாடுகள் காய்கறி விலையை ஏற்றியுள்ளன : வணிகர் சங்கம் கண்டனம்!

காய்கறி விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கறுப்பாடுகள் காய்கறி விலையை ஏற்றியுள்ளன : வணிகர் சங்கம் கண்டனம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

கறுப்பாடுகள் காய்கறி விலையை ஏற்றியுள்ளன : வணிகர் சங்கம் கண்டனம்!

இந்நிலையில் காய்கறி விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. சில கருப்பு ஆடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளன. அதிக விலைக்கு காய்கறிகளை விற்கும் நபர்களை வணிகம் செய்யும் நிலையில் இருந்து நீக்க வேண்டி இருக்கும். அதிக விலைக்கு விலைவாசி உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் வணிகர்கள் செயல்பட வேண்டும்