ரஷ்யாவில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள் : முதல்வர் பழனிசாமி இரங்கல்!

 

ரஷ்யாவில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள் : முதல்வர்  பழனிசாமி இரங்கல்!

சென்னை பெரம்பூர் குக் சாலை பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் ஸ்டீபன் மருத்துவப் படிப்பிற்காக ரஷ்யாவின் ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.பி.பி.எஸ் படித்து வந்தார்.

ரஷ்யாவில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள் : முதல்வர்  பழனிசாமி இரங்கல்!

இவர் மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவர்களுடன் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று வோல்கா நதிக்கரைக்கு பத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுடன் சென்றார். அப்போது அங்கு நீரில் சிக்கி கொண்ட மாணவரை காப்பாற்ற சென்ற ஸ்டீபன் நீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற 4 மாணவர்களும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இதில் தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் இறந்த நிலையில் அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியது. இதுகுறித்து 4 மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நான்கு பேரின் சடலத்தையும் மீட்ட ரஷ்ய போலீசார் உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள், சென்னையயை சேர்ந்த ஸ்டீபன், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள் : முதல்வர்  பழனிசாமி இரங்கல்!

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி ரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஆற்றில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக, சுழற்சியில் சிக்கி 4 மாணவர்களும் உயிரிழந்தனர் என்ற செய்தியால் மிகுந்த மனவேதனையடைந்தேன் என்று கூறியுள்ள அவர், தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.