‘பிரிட்டனில் மீட்கப்பட்ட சிலைகள்’ – 40 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வருவதால் மகிழ்ச்சியில் கிராம மக்கள்!

 

‘பிரிட்டனில் மீட்கப்பட்ட சிலைகள்’ – 40 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வருவதால் மகிழ்ச்சியில் கிராம மக்கள்!

மயிலாடுதுறை அனந்தமங்கலம் கிராமத்தில் பிரபலமான ராஜகோபால சுவாமி கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் வெண்கல சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 1978ம் ஆண்டு இந்த சிலைகள் திருட்டு போனதால், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் மாறி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டும் சிலைகள் எங்கே இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

‘பிரிட்டனில் மீட்கப்பட்ட சிலைகள்’ – 40 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வருவதால் மகிழ்ச்சியில் கிராம மக்கள்!

இதை தொடர்ந்து கடந்த 4 வருடங்களுக்கு முன், வெண்கல சிலை விற்பனைக்கு இருப்பதாக டீலர் ஒருவர் சிலைகளின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இது தமிழக காவல்துறையின் கவனத்துக்கு எட்டியதால், உரிய ஆதாரத்துடன் பிரிட்டன் அரசிடன் சிலைகளை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். அதன் படி கடந்த மாதம் 3 சிலைகளும் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் விரைவில் தமிழகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன சிலைகள், மீண்டும் கோவிலில் வைக்கப்படவிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலைகளை அனுமன் ஜெயந்திக்கு முன்னதாக, தமிழகம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.