10ம் வகுப்பு தேர்வு தள்ளிப்போகிறதா? – முதல்வருடன் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்க ஒரு வாரம் உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போதுதான் கொரோனா வேகம் எடுத்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் முதலில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்த அரசு தற்போது அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்துள்ளது. ஆனாலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 1500ஐ தாண்டி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் தொடங்க உள்ளன. பீதி காரணமாக பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேர்வு எழுத அனுப்ப மாட்டோம் என்று கூறி வருகின்றனர். சிலர் மட்டுமே தேர்வு முடிந்தால் போதும், எப்போது தேர்வு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பே மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. எனவே தேர்வு நடத்த வேண்டும் என்கின்றனர்.
கொரோனா பீதி காரணமாக பலரும் தேர்வு எழுத வர மாட்டார்கள், வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. எனவே, 10ம் வகுப்பு தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் தேர்வை குறிப்பிட்ட தேதியில் நடத்தியே தீருவோம் என்று அரசு கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது.
தேர்வை நடத்த வேண்டிய தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் கொரோனா நோய்ப் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது வரை நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் காரணம் அலுவலர்கள் அனைவரும் பணிக்கு வந்ததுதான் என்று கூறப்படுகிறது. இப்போதே இவ்வளவு பிரச்னை என்றால், தேர்வுகள் தொடங்கிவிட்டால் தமிழகம் முழுவதும் இன்னும் அதிக அளவில் கொரோனா பரவிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா நோய்த் தொற்றின் மையமாக தேர்வு நடைபெறும் இடங்கள் மாறிவிடும் என்றும் எச்சரக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பான முறையில் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேர்வை தள்ளி வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Most Popular

சைபுதீன் சோஸை கைதி போல் அரசு நடத்துகிறது.. நம் நாடு ஜனநாயக குடியரசு நினைவில் வைச்சுகோங்க.. பிரியங்கா

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ். அவரை வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்ய காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி...

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...