லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் தமிழக வீரர் மரணம்; டிடிவி தினகரன் இரங்கல்!

 

லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் தமிழக வீரர் மரணம்;  டிடிவி தினகரன் இரங்கல்!

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு படை வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். உயிரிழந்த அந்த 2 படை வீரர்களுள் ஒருவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலால் லடாக்கில் தற்போது நிலவி வரும் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் வீரமரணத்துக்கு இரங்கல் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் தமிழக வீரர் மரணம்;  டிடிவி தினகரன் இரங்கல்!

 

அந்த பதிவில் , “ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழனியின் தியாகத்திற்குத் தலை வணங்குவோம் !சீன ராணுவத்தின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் திரு.பழனி உள்ளிட்ட மூன்று பேருக்கும் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.