திமுக சாதனை; அசராத அதிமுக : கட்சி வாரியாக வாக்கு சதவீதம்!

 

திமுக சாதனை; அசராத அதிமுக :  கட்சி வாரியாக வாக்கு சதவீதம்!

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 159 இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சி இடம் பெறாமல் இருந்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைய உள்ளதை அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

திமுக சாதனை; அசராத அதிமுக :  கட்சி வாரியாக வாக்கு சதவீதம்!

இந்நிலையில் திமுக 37.69% வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதிமுக 33.29% வாக்குகளும், பாமக 4.04% வாக்குகளும், காங்கிரஸ் 4.41% வாக்குகளும் பெற்றுள்ளது. பாஜக 2.63% வாக்குகள் பெற்றுள்ள நிலையில், சிபிஐ 1.09% வாக்குகளும், சிபிஐ எம் 0.85 % வாக்குகளும், தேமுதிக 0.43% வாக்குகளும் பெற்றுள்ளது.

திமுக சாதனை; அசராத அதிமுக :  கட்சி வாரியாக வாக்கு சதவீதம்!

அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில், அதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. அத்துடன் ஒன்றில் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களில் வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளது.

திமுக சாதனை; அசராத அதிமுக :  கட்சி வாரியாக வாக்கு சதவீதம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், திமுக 126 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் 7 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் திமுகவுக்கு 133 இடங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி , பாமக 5 இடங்களில் வெற்றி , விசிக 4 டங்களில் வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது