• December
    14
    Saturday

Main Area

Main



முதல்நாளிலே நாடாளுமன்றத்தில் அதிர்ந்த தமிழ்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ்_வாழ்க... 

கனிமொழி
கனிமொழி

நாடாளுமன்றத்தில் பதிவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் செய்து மற்ற மாநிலங்களின் மக்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த எம்.பிக்கள் நேற்றும் இன்றும் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழிலேயே உறுதிமொழி ஏற்று, இறுதியாக தமிழ் வாழ்க என கோஷமிட்டதால் அவையே அதிர்ந்தது. 

twitter

குறிப்பாக தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி பதவி பிரமாணம் செய்த பின்பு 'தமிழ் வாழ்க', பெரியார் வாழ்க என குறிப்பிட்டார். இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், வாழ்க தமிழ், வாழ்க அம்பேத்கர் என்ற முழக்கத்துடன் பதவியேற்றுக்கொண்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், ``வாழ்க அம்பேத்கர், பெரியாரியம்.. வளர்க ஜனநாயக சமத்துவம்” என்றார். இதனால் இன்று மதியத்திலிருந்து ட்விட்டரில் தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதேபோல் பாஜகவினர் பாரத மாதா ஜீ ஜெய் என கோஷமிட்டு பதவியேற்றுக்கொண்டனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.