இந்த மாவட்டங்களில் மட்டும் திருமணங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி!

 

இந்த மாவட்டங்களில் மட்டும் திருமணங்களுக்கு  இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா தளர்வுகளுக்காக 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளின்றி ஏற்கனவே உள்ள செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ,கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி ,தென்காசி ,திருநெல்வேலி, திருப்பத்தூர் ,திருவண்ணாமலை ,தூத்துக்குடி ,திருச்சி, விழுப்புரம், வேலூர் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே இ -பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இ- பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இணைய வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மட்டும் திருமணங்களுக்கு  இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி!

நீலகிரி மாவட்டம் கொடைக்கானல் ஏற்காடு ,ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரனோ நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மட்டும் திருமணங்களுக்கு  இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி!

அத்துடன் பொது இடங்களில் முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை அடிக்கடி சோப்பு/ கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெறவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.