கொரோனாவின் இரண்டாவது அலையை கடக்க முழு ஒத்துழைப்பு தேவை; சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனாவின் இரண்டாவது அலையை கடக்க முழு ஒத்துழைப்பு தேவை;  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் கடந்த சில மாதங்களை விட இந்த மாதம் சென்னையில் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் குறைந்திருக்கிறது. அதே போல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலையை கடக்க முழு ஒத்துழைப்பு தேவை;  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவின் 2 ஆவது அலையை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.