• February
    17
    Monday

Main Area

Main



இயற்கைக்கு எதிரான எந்தத் திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது: அதிமுக அமைச்சர் உறுதி!

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்தத் திட்டத்துக்கும்  தமிழக அரசு அனுமதி வழங்காது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

stalin

காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கு அடியிலிருந்தும் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் உறிஞ்சப்படும் அபாயமும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தி வருகின்றனர். 

shanmugam

இந்நிலையில்  தமிழகத்தில் கூடுதலாக பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானமும் திமுக சார்பில் கொண்டு வரப்பட்டது.  இந்தத் தீர்மானத்திற்குப் பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்தத் திட்டத்துக்கும் எந்தக் காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது. மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தாலும் தமிழக அரசும் அனுமதி வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் தான் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால்  மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகின்றனர்' என்றார். 

2018 TopTamilNews. All rights reserved.