“கட்டுக்குள் வந்த கொரோனா” மலைக்கவைக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

 

“கட்டுக்குள் வந்த கொரோனா” மலைக்கவைக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழகமும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியது. ஆரம்ப கட்டத்தில் பாதிப்பு குறைவாகவே இருந்த நிலையில், ஒரு சில நாட்களிலேயே பாதிப்பு பன்மடங்கு அதிகமாகியது. தமிழகத்தின் கதி என்னவென மக்கள் பீதியடைந்து, கொரோனாவால் அஞ்சி நடுங்கினர். ஆனால் தற்போது கொரோனாவின் பிடியில் இருந்து தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது. இதில் பெரும்பங்கு ஆற்றியது தமிழக அரசே. குறிப்பாக சென்னையில் பாதிப்பு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பு குறைந்திருக்கிறது. கொரோனாவில் இருந்து தமிழகத்தை காக்க அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்தது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

“கட்டுக்குள் வந்த கொரோனா” மலைக்கவைக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

வெளிநாடுகளில் இருந்தோ அல்லது வெளிமாநிலங்களில் இருந்தோ தமிழகம் வருபவர்களுக்கு லேசான அறிகுறி இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அறிகுறி ஏதும் இல்லை என்றால் கட்டாயம் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். அந்த 14 நாட்களுள் அவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு வீடாக 3 முதல் 7 நாட்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகளை நியமித்து, உடல் வெப்பநிலை உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அறிகுறி தென்பட்டால் அவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

“கட்டுக்குள் வந்த கொரோனா” மலைக்கவைக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

தீவிர கொரோனா பரிசோதனை:

தமிழகத்தில் இதுவரை 3.2 மில்லியன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 11 கோடி மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திலேயே 2.7 மில்லியன் பரிசோதனைகள் தான் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 8 கோடி மக்கள் தொகை இருக்கும் தமிழகத்தில் அதிகளவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

“கட்டுக்குள் வந்த கொரோனா” மலைக்கவைக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

கட்டுக்குள் கொரோனா பாதிப்பு பகுதிகள்:

கொரோனா அதிகமாக இருந்த சென்னையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக அங்கு பாதிப்பு கட்டுக்குள் வந்தது. உலகில் இருக்கும் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் பாதிப்பு அதிவேகத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னையில் செயல்படுத்தப்பட்ட நடைமுறை தற்போது பிற மாவட்டங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள தெருக்களை வரைபடத்தில் கொண்டு வந்த அரசு 300 மக்களை கண்காணிக்க ஒரு அதிகாரியை நியமித்தது. அதே போல பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகள் கண்டெயின்மண்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டு, தினமும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

“கட்டுக்குள் வந்த கொரோனா” மலைக்கவைக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

ஊரடங்கு உத்தரவு, இபாஸ்:

தமிழகத்தில் ‘ஆரோக்கிய சேது செயலி’ மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. எந்த வகை அறிகுறி இருந்தால் கொரோனா என்பதை மக்களுக்கு எளிதில் உணர்த்த இந்த செயலி ஒரு முக்கிய பங்காற்றியது. அதே போல மக்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் கடைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டன. இதுமட்டுமில்லாமல் மக்கள் அநாவசியமாக வெளியே சுற்றித்திரியாமல் தடுக்க இபாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அந்த பாஸ்களும் கூட அவசர தேவைகளுக்காக மட்டுமே வழங்கப்பட்டன.

“கட்டுக்குள் வந்த கொரோனா” மலைக்கவைக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

இயல்பு நிலையில் சென்னை:

சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் கடந்த மாதம் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதற்கு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை மட்டுமே காரணம். சென்னையில் தற்போது 87.5 சதவீத மக்கள் குணமடைந்து விட்டனர். ஆரம்பகட்டத்தில் 1000 சிவப்பு மண்டலங்கள் இருந்தன. ஆனால் தற்போது 24 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே இருக்கின்றன. இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மூலமாக, இந்திய அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.