நாளை முதல் சலூன், பியூட்டி பார்லர்களுக்கு அனுமதி..சென்னையில் மட்டும் கிடையாது!

 

நாளை முதல் சலூன், பியூட்டி பார்லர்களுக்கு அனுமதி..சென்னையில் மட்டும் கிடையாது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையிலும், நான்காம் கட்ட ஊரடங்கு போடப்பட்ட போது 34 வகையான கடைகளுக்கு அரசு அனுமதி அளித்தது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அந்த கடைகளுக்கு அனுமதி அளித்த அரசு, விதித்த கட்டுப்பாடுகளுடன் தான் செயல்பட வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதன் படி, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விட்டன. ஆனால் சலூன், பியூட்டி பார்லர்கள், ஸ்பா உள்ளிட்ட கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கவில்லை.

நாளை முதல் சலூன், பியூட்டி பார்லர்களுக்கு அனுமதி..சென்னையில் மட்டும் கிடையாது!

இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கிராமங்களில் மட்டும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்புறங்களிலும் நாளை முதல் சலூன் மற்றும் பியூட்டி பார்லர்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர பிற அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் நாளை முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குளிர்சாதன வசதிகளுடன் இயங்கும் சலூன் கடைகளை ஏ.சி பயன்படுத்தக் கூடாது என்றும் சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி தெளிப்பதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.