நாளை முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அரசு அனுமதி!

 

நாளை முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அரசு அனுமதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையிலும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசு பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இத்தகைய தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

நாளை முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அரசு அனுமதி!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசு தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தற்போது பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருகிறது.

சென்னை பெருநகர காவல்துறை குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளை இயக்க தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எல்லைக்குட்பட்ட தொழிற்பேட்டைகள் அதாவது சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட கிண்டி அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் 25.5.2020 முதல் தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25 சதவீத தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை.

கட்டுப்பாடுகள்: தினமும் தொழிலாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் பரிசோதனை செய்யவேண்டும். பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிவது உதவிசெய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்றுவது உறுதி செய்ய வேண்டும். தினமும் காலை மாலை தொழிற்சாலையை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். தொழிற்சாலையில் உள்ள கழிப்பறையை தினமும் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர்களுக்கு காய்ச்சல் சளி இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு பணியிலிருந்து விடு பறிக்கப்படவேண்டும். சோப்பு மற்றும் கிருமி நாசினி உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையைப் பின்பற்றவும் போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் இதுதவிர பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணி புரிவதை கண்காணிக்கவும் அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு முறைகளை நான் தீவிரமாக கடை பிடிப்பது உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.