தடுப்பூசிக்கு தட்டுபாடு… முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

 

தடுப்பூசிக்கு தட்டுபாடு… முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

18 – 45 வயதுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது. இவ்வாறு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் 18 – 45 வயதுள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொய்வடைந்துள்ளது.

தடுப்பூசிக்கு தட்டுபாடு… முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

இதன் காரணமாக, தடுப்பூசியை நேரடியாக இறக்குமதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒதுக்கிய தடுப்பூசி போதிய அளவில் இல்லை. தடுப்பூசி செலுத்துவதற்கு தடுப்பூசிகள் போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு குறுகிய காலத்தில் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு தட்டுபாடு… முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

மேலும், தமிழகத்திற்கான மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது என்றும் மத்திய அரசு விநியோகம் செய்யும் ஆக்சிஜன் அளவு உயர்த்தப்பட்டாலும் தமிழகத்திற்கு இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே, போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை அமைக்கவும் பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.