‘ஸ்டெர்லைட் ஆலை வழக்கு’.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் கேவியட் மனு தாக்கல்!

 

‘ஸ்டெர்லைட் ஆலை வழக்கு’.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் கேவியட் மனு தாக்கல்!

சுற்றுச்சூழலை நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்த நிலையில், அந்த வழக்கின் முடிவுகள் வெளியாகின. அந்த தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. 813 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் முழு விவரங்கள் நேற்று வெளியானது.

‘ஸ்டெர்லைட் ஆலை வழக்கு’.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் கேவியட் மனு தாக்கல்!

உயர்நீதிமன்றத்தின் இந்த மகத்தான தீர்ப்புக்கு தூத்துக்குடி மக்கள் வரவேற்பு அளித்ததோடு, தலைவர்கள் பலரும் வரவேற்பை தெரிவித்தனர். ஆனால், இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் சட்ட ரீதியான போராட்டம் தொடரும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ தெரிவித்தார். இன்று காலை மக்கள் அதிகார அமைப்பினர், ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மேல்முறையீடு செய்தால் எங்களது கருத்தையும் கேட்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மேல்முறையீடு செய்தால் எங்களது கருத்தையும் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.