darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



சுபஸ்ரீ மரணத்திற்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதி மன்றம் உத்தரவு

Chennai high court
Chennai high court

கடந்த செப்டம்பர் மாதம் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சென்னை பள்ளிக் கரணை அருகே பேனர் தவறி விழுந்ததில் லாரி மீது மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுபஸ்ரீயின் மரணத்தின் இடைக்கால நிதியாக சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலும் கைது செய்யப்பட்டார். சுபஸ்ரீயின் மரணத்திற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பேனர்களை இனி தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறியும் சுபஸ்ரீயின் தந்தை ரவி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

Subasree death

அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதி மன்றம், சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பீடு என்பதால் மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாமே என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், சுபஸ்ரீயின் மரணம் குறித்த இந்த வழக்கிற்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.