கையெழுத்து போட போன கேப்பில் அரசு பேருந்தை ஆட்டையை போட்ட பலே திருடன்!

கையெழுத்து போட போன கேப்பில் அரசு பேருந்தை ஆட்டையை போட்ட பலே  திருடன்!

சென்னையில் அரசு பேருந்து கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையெழுத்து போட போன கேப்பில் அரசு பேருந்தை ஆட்டையை போட்ட பலே  திருடன்!

சென்னை அண்ணாநகர் பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணிக்கு வந்துள்ளனர். அப்போது 27பி என்ற வழித்தட எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டுநர் சோதனை செய்தபின்பு பணிமனைக்கு முன்பு நிறுத்திவிட்டு கையெழுத்திட சென்றுள்ளார். பின்னர் பணிமனையிலிருந்து கையெழுத்திட்டு வெளியே வந்த ஓட்டுநருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவர் நிறுத்திவிட்டு சென்ற பேருந்து காணாமல் போயிருந்தது.

கையெழுத்து போட போன கேப்பில் அரசு பேருந்தை ஆட்டையை போட்ட பலே  திருடன்!

இதை தொடர்ந்து அரசு பேருந்து திருடு போன சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசில் போக்குவரத்து அதிகாரிகள் புகார் அளித்தனர். பின்னர் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவியை ஆய்வு செய்ததில் அரசு பேருந்து பாடி மேம்பாலத்தின் கீழ் நிற்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அரசு பேருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து அண்ணாநகர் பணிமனையை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு பேருந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் லாவகமாக திருடி சென்ற திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.