சித்த மருத்துவர் சுப்ரமணியன் தயாரித்த ‘இம்ப்ரோ’ மருந்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது- தமிழக அரசு

 

சித்த மருத்துவர் சுப்ரமணியன் தயாரித்த ‘இம்ப்ரோ’ மருந்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது- தமிழக அரசு

சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தை நிபுணர் குழுவினர் பரிசோதித்ததில், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது. வைரஸ் எதிர்ப்பு சக்தியும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனவே, மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற சித்த மருந்தை புதிதாக கண்டுபிடித்துள்ளேன். இந்த மருத்துவ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து, தினமும் இருவேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடலாம். இந்த மருந்தால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.

சித்த மருத்துவர் சுப்ரமணியன் தயாரித்த ‘இம்ப்ரோ’ மருந்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது- தமிழக அரசு
உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமமான அளவில் வைத்திருக்கும். இன்னும் பல நோய்களை கட்டுப்படுத்தக்கூடியது. சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவமே உதவியது. எனவே, எனது கண்டுபிடிப்பான ‘இம்ப்ரோ’ சித்த மருந்தை, நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே நான் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோவை, நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தி முடிவுகளை தருவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு மருத்துவ நிபுணர் குழுவை அமைக்கவும், மனுதாரர் அந்த குழுவின் முன் மதாரர் ஆஜராகி தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கமளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “மனுதாரரின் மருந்தை மருத்துவ நிபுணர் குழுவினர் பரிசோதித்தனர். அதில், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது. வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனவே, மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.