16 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: 8,555 பேருக்கு வேலைவாய்ப்பு!

 

16 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: 8,555 பேருக்கு வேலைவாய்ப்பு!

கடந்த 20 ஆம் தேதி தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தாகியது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் விக்ரம்சோலார் என்ற நிறுவனம் 5,423 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி 7,542 பேருக்கு வேலைவாய்ப்பும், சிங்கப்பெருமாள்கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில் யோடா என்ற நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தரவு மையம் தொடங்கி 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளது. இதே போல பல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

16 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: 8,555 பேருக்கு வேலைவாய்ப்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் முதலீடு செய்யும் விதமாக 16 நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த 16 நிறுவனங்களில் ரூ.5.137 கோடி முதலீட்டால் தமிழகத்தில் 8,555 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.