ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம்!

 

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம்!

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு பின்னர், அவர் வசித்து வந்த போயஸ் தோட்டம் இல்லம் நினைவு இடமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் ஜெயலலிதாவின் உறவினரான தீபா, போயஸ் இல்லத்தை நினைவிடமாக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.அந்த வழக்கு தொடரப்பட்டதன் இடையே, போயஸ் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் அரசு தீவிரப்படுத்தி, அந்த நிலத்தையும் கையகப்படுத்த முயற்சி செய்தது.

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம்!

இது தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் யாரும் வசிக்கவில்லை என்பதால், நினைவிடமாக மாற்றுவதில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்த நிலத்திற்கு அடியில் எந்த வித கனிம வளங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.