தமிழகம் முழுக்க ஊரடங்கு… முதல்வரிடம் வலியுறுத்திய சுகாதாரக் குழு!

 

தமிழகம் முழுக்க ஊரடங்கு… முதல்வரிடம் வலியுறுத்திய சுகாதாரக் குழு!

தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுக்க ஊரடங்கு… முதல்வரிடம் வலியுறுத்திய சுகாதாரக் குழு!
தமிழகத்தில் தற்போது சென்னை, சென்னையை ஒட்டிய பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மூன்று மாவட்டங்கள், மதுரை, தேனியில் முழு ஊரடங்கு உள்ளது. முழு ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு வாரம் முடிந்துள்ளது. இருப்பினும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் மட்டும் காணப்பட்ட பெருந்தொற்று தற்போது மாநிலம் முழுவதும் காணப்படுகிறது. சமூக பரவல் என்ற நிலையை அடைந்துவிட்டதாக கருதப்படுகிறது. ஆனால், தமிழக அரசு சமூக பரவல் நிலையை அடையவில்லை என்று உறுதி செய்துள்ளது.

தமிழகம் முழுக்க ஊரடங்கு… முதல்வரிடம் வலியுறுத்திய சுகாதாரக் குழு!
இந்த நிலையில் சென்னையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதலமைச்சர் வருகிற திங்கட்கிழமை ஆய்வு செய்ய உள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பரிந்துரை செய்துள்ளது. ஜூலை 1 முதல் 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான பரிந்துரைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமை நடக்கும் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.