#Velachery இது திராவிட மண்ணுன்னா ஸ்டாலின் வாங்கி போட்டாரா?

 

#Velachery இது திராவிட மண்ணுன்னா  ஸ்டாலின் வாங்கி போட்டாரா?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்த சூழலில் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு மீண்டும் ஆட்சியை பிடித்து விட முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல் திமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் முதல்வர் நாற்காலியை பிடித்துவிட தீவிரமாக உழைத்து வருகிறது. இந்த சூழலில் நமது டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து வருகிறது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போவது வேளச்சேரி தொகுதி…

#Velachery இது திராவிட மண்ணுன்னா  ஸ்டாலின் வாங்கி போட்டாரா?

வேளச்சேரி தொகுதியில் 2011 ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த அசோகன் என்பவர் வெற்றி பெற்றார் அப்போது அவர் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 82, 145. 2016ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த வாகை சந்திரசேகர் 70 ஆயிரத்து 539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வேளச்சேரி 2011 ஆம் ஆண்டு புதியதாக உருவாக்கப்பட்ட தொகுதி. இந்த தொகுதி இரண்டு முறை சட்மன்ற தேர்தலை சந்தித்துள்ள நிலையில், இங்கு அதிமுக ஒரு முறையும், திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

#Velachery இது திராவிட மண்ணுன்னா  ஸ்டாலின் வாங்கி போட்டாரா?

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் எம்.கே.அசோக், காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஹெச்.அசன் மவுலானா, அமமுக சார்பில் எம்.சந்திரபோஸ், மநீம சார்பில் சந்தோஷ்பாபு உட்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் கடும் போட்டி நிலவுவது திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும், அதிமுகவுக்கும் தான்.

#Velachery இது திராவிட மண்ணுன்னா  ஸ்டாலின் வாங்கி போட்டாரா?

வேளச்சேரியில் அதிகம் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே வசித்து வருகின்றனர். ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகம் காணப்படுகிறது. இருப்பினும் மழை காலங்களில் மழைநீர், கழிவுநீர் ஆகியவை தேங்கி, பல்வேறு நோய்களை உண்டாக்கி விடுகின்றன. இதனால் மழைநீர், கழிவுநீர் வடிய ஏதுவாக வழிமுறை செய்து தரவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.