“இதை செய்திருந்தால் அதிமுக தான் ஹாட்ரிக் அடித்திருக்கும்” : கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

“இதை செய்திருந்தால் அதிமுக தான் ஹாட்ரிக் அடித்திருக்கும்” : கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி  தகவல்!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது அதே போல் அதற்கான வாக்களிக்க மே 2ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றனர் அந்த வரிசையில் இணைந்துள்ளது ஜெகத் கஸ்பரின் டி-இண்டலிஜன்ஸ் .

“இதை செய்திருந்தால் அதிமுக தான் ஹாட்ரிக் அடித்திருக்கும்” : கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி  தகவல்!

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக கூட்டணி 167 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 51 இடங்களிலும் ,அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கூட்டணிக் கட்சிகள் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் 14 தொகுதிகளில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

“இதை செய்திருந்தால் அதிமுக தான் ஹாட்ரிக் அடித்திருக்கும்” : கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி  தகவல்!

வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு 46 சதவீதமும், அதிமுக கூட்டணிக்கு 34% வாக்கும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது . அதைபோல் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 5% வாக்கும், நாம் தமிழர் கட்சிக்கு 7% வாக்கும், தினகரனின் அமமுக கட்சிக்கு 4% வாக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .யாருக்கும் ஓட்டு இல்லை என்று தெரிவிக்கும் வகையில் நோட்டாவுக்கு 4 சதவீதம் வாக்குகள் இந்த தேர்தலில் கிடைக்கும் என்று டி-இண்டலிஜன்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. அதே சமயம் கடந்த தேர்தலில் அதிமுக கட்சிக்கு கிடைத்த வாக்கு வங்கியில் சுமார் 10% இந்த முறை இழக்க நேரிடும் என்றும் திமுக வாக்கு வங்கி 7 சதவீதம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“இதை செய்திருந்தால் அதிமுக தான் ஹாட்ரிக் அடித்திருக்கும்” : கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி  தகவல்!

அதிமுக – பாஜக கூட்டணிக்கு கடந்த மக்களவைத் தேர்தலின்போது இருந்த அதிருப்தி மக்கள் மத்தியில் இல்லை . இதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக பொதுமக்கள் நிலைப்பாடு சற்று மாறி உள்ளதும் தெரியவந்துள்ளது . அதேசமயம் சசிகலா, டிடிவி தினகரனுடன் சமரசமாக சென்றிருந்தால் பாஜகவின் சுமை அதிக அளவில் வெளிப்படையாக தெரிந்து இருக்காது என்றும் இதன் மூலம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.