“கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது” : முதல்வர் பழனிசாமி

 

“கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது” : முதல்வர் பழனிசாமி

கொரோனாவின் தீவிரத்தை அறிந்து மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது” : முதல்வர் பழனிசாமி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பாதிப்பு 1,36,89,453 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் 12,64,698 உள்ள நிலையில் 879 பேர் ஒரேநாளில் உயிரிழந்தார். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,71,058 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்து 97,168 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று ஒரேநாளில் 6,711 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 40ஆயிரத்து 145ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,927 ஆக உயர்ந்துள்ளது.

“கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது” : முதல்வர் பழனிசாமி

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அத்துடன் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தொழிற்சாலைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்தார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளது. அரசு அலுவலர்கள் தினந்தோறும் பணிக்கு செல்வதால் அவர்கள் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவின் தீவிரத்தை அறிந்து மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.