மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயர்சூட்ட வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு தமிழக பாஜக கடிதம்

பாரிமுனை, விமான நிலைய மொட்ரோ ரயில் நிலையங்களுக்கு டாக்டர் அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்வர் வாய்பாய் பெயர் சூட்டப்படவேண்டும் என தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை சூட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையமானது, “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ என்பது, “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது “புரட்சித் தலைவி டாக்டர்.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், சென்னை பாரிமுனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரையும், சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரையும் சூட்டவேண்டுமென தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆலந்தூர், செண்ட்ரல், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் பெயர்களை சூட்டியதை தமிழக பாஜக வரவேற்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...