ஒரு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

 

ஒரு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆட்சிக்கு வந்து 70 நாட்கள் ஆகியும் திமுக ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சரானதால், அந்த பதவிக்கு துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் மூத்தவர்கள் பலர் இருக்கும் போது அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சியை வழி நடத்திச் செல்வதற்கு வயது தேவையில்லை என ஒரே பேட்டியில் அனைவரையும் வாயடைக்கச் செய்துவிட்டார்.

ஒரு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி பாஜகதான் தமிழகத்தின் எதிர்காலம். பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பாஜகவின் சித்தாந்தத்தை கொண்டு செல்வதே இலக்கு என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 70 நாட்கள் ஆகியும் ஒரு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை. எதற்காக நீட் தேர்வு வேண்டாம் என்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.நீட் தேர்வு நல்லது என்று அனைத்து பகுதிகளிலும் பாஜக விழிப்புணர்வு ஏற்படுத்தும். நீட்தேர்வு வந்த பிறகும் ஏழை மாணவர்கள் கல்வி பயில முடிகிறது. இதுவே உண்மையான சமூக நீதி என்று தெரிவித்தார்.

மத்திய அரசு தடுப்பூசி குறைவாக வழங்குகிறது என அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழக அரசு பொய் புகார் சொல்கிறது என்று குற்றஞ்சாட்டிய அவர், கொங்குநாடு விவகாரத்தில் குழப்பமில்லை. உணர்ச்சிபூர்வமாக அரசியல் செய்வது பாஜக அல்ல. ஒன்றிய அரசு என கூறுவதற்கு எதிராக கொங்குநாடு எனக் கூறவில்லை என்று கூறினார். மேலும், ஊடகங்களின் மீது பாஜக மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளது. ஐடி சட்டத்தில் உள்ள ஊடக நெறிமுறைகள் என்ற பிரிவைப் பற்றி தான் நான் பேசினேன். ஊடக நெறிமுறைகள் பற்றி நான் பேசியதை தவறாக தவறாக சித்தரித்துள்ளனர் என்றும் விளக்கமளித்தார்.