Advertisementதமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் உண்ணாவிரத போராட்டம்!தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் உண்ணாவிரத போராட்டம்!
Home அரசியல் தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் உண்ணாவிரத போராட்டம்!

தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் உண்ணாவிரத போராட்டம்!

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து தஞ்சாவூரில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் உண்ணாவிரத போராட்டம்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இதற்கு திமுக தலைமையிலான தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அந்த வகையில், தமிழக பாஜகவும் திமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. கர்நாடகவில் ஆளும் அரசு பாஜக என்றாலும் அதை எதிர்த்து போராட தயாராக இருப்பதாக பாஜகவினர் தெரிவித்திருந்தனர்.

தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் உண்ணாவிரத போராட்டம்!

இதையடுத்து, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன் படி, இன்று தஞ்சை பனகல் கட்டிடம் அருகே அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் உண்ணாவிரத போராட்டம்!

அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடக்கிவைத்த நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் உண்ணாவிரத போராட்டம்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஐபிஎல் – பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-வது போட்டியில் சென்னை சூப்பார் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஷார்ஷாவில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ்...

பிரபல இயக்குநர் கேயார் மனைவி காலமானார்

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமானவர் கேயார். இவரின் மனைவி இந்திரா உடல்நலக்குறைவால் காலமானார். ஈரமான ரோஜாவே, இரட்டைரோஜா...

தமிழக தலைமைச் செயலாளர் காரை முற்றுகையிட்ட மக்கள்

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை நேரில் பார்வையிட்டார் . பூண்டி ஏரியில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது அவரது வாகனத்தினை பூண்டி கிராம மக்கள்...
TopTamilNews