• March
    30
    Monday

Main Area

Main



இன்று கூடுகிறது சட்டப்பேரவை.. சிஏஏ போராட்டங்கள் எதிரொலிக்குமா!

tn
tn

தமிழக துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த 14 ஆம் தேதி 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை 10 ஆவது முறையாகத் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் அறிவிப்புகளைத் தெரிவித்தார். 

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சபாநாயகர்  சட்டப்பேரவை வரும் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். அதனையடுத்து, பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் 17 ஆம் தேதி(இன்று) முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி இன்று சட்டப்பேரவை கூடுகிறது. 

ttn

இரண்டு நாள் விடுமுறைக்கு இன்று மீண்டும் கூடும் சட்டப்பேரவையில் முதலாவதாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப் படும். அதன் பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த கூட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு குறித்தும் குடியுரிமை சட்டத்திருத்தத்தை  எதிர்த்து இஸ்லாமியர்கள் 4 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.