கிசான் திட்டத்தில் முறைகேடு; தமிழ்நாடு வேளாண்துறை இயக்குனர் திடீர் ஆய்வு!

 

கிசான் திட்டத்தில் முறைகேடு; தமிழ்நாடு வேளாண்துறை இயக்குனர் திடீர் ஆய்வு!

விவாசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் விதமாக மத்திய அரசு விவசாய நிதியுதவி (பி.எம். கிசான்) திட்டம் தொடக்கியது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பலர் பயன்பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் முறைகேடு நடந்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக வேளாண்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதே போல, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலா் ககன்தீப் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கிசான் திட்டத்தில் முறைகேடு; தமிழ்நாடு வேளாண்துறை இயக்குனர் திடீர் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் மட்டுமே இந்த ஆண்டு 80,752 பேர் இந்த திட்டத்துக்கு பதிவு செய்துள்ளனர். அதனால் அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. நேற்று வேளாண்மைத் துறையின் கூடுதல் இயக்குநர் கடலூா், குறிஞ்சிப்பாடி, புவனகிரி உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வுக்கு பிறகு பேசிய அவர், சுமார் 37 ஆயிரம் பேர் போலியாக சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், கிசான் திட்ட முறைகேடு குறித்து தமிழ்நாடு வேளாண்துறை இயக்குனர் தட்சணாமூர்த்தி கள்ளக்குறிச்சியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று இவர் விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.