• April
    26
    Friday

Main Area


பிரபாகரன் (கோப்புப்படம்)

ரூ.10 நாணயங்களால் அதிகாரிகளை தெறிக்க விட்ட சூலூர் சுயேட்சை வேட்பாளர்!

தமிழகத்தில் கடந்த 18-ம் தேதியன்று மக்களவை மற்றும் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது


தனபால் (கோப்புப்படம்)

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம்; நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு!

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டில் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்


குளிர்

சென்னையில் மைனஸ் 3 டிகிரி கடுங்குளிரில் கொத்து கொத்தாக மக்கள் செத்தது உங்களுக்கு தெரியுமா!?

சென்னையில் வெயிலின் அளவு எகிறியடிக்கிறதை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!இதே சென்னையில் ஒருமுறை,மைனஸ் 3 டிகிரி குளிர் கொண்டெடுத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா!?

அய்யய்யோ... அதுமட்டும் நடந்தே விடக்கூடாது... 60 ஆண்டுகளுக்குப் பிறகு பதறித் துடிக்கும் தமிழகம்..!

இந்திய வானிலை அறிக்கைப்படி 60 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய புயல் உருவாக இருப்பதால் ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.strom
 
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’’ தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல்- 30, மே 1ம் தேதி  கனமழை முதல் மிக கனமழை பெய்யும்  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 115.6 முதல் 204.4 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இந்தப்புயல் வர்தா, கஜா, ஜல், தானே புயல்களை விட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  இதனால், அச்சத்தில் உறைந்துள்ளனர் மக்கள். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உருவான புயல்கள் தமிழகத்தை எப்படி புரட்டிப்போட்டது..? எத்தனை பேரிடர்களை மக்கள் சந்தித்தனர்? பாதிப்புகள் என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்...strom

2011ம் ஆண்டு டிசம்பர் 25ல் இந்தோனேஷியாவில் கிளம்பி  27ல் இலங்கை வழியாக புகுந்து  29, 30 தேதிகளில் தமிழகத்தில் வட கடலோர பகுதியில் கோரதாண்டவம் ஆடி விட்டுப்போனது. மணிக்கு 165 கிலோமீட்டர் முதல் 165 கிலோமீட்டர் வேகம் கூட்டி கடலூரை கபலீகரம் செய்தது. தமிழகத்தில் மொத்தம் 48 உயிர்களையும் புதுச்சேரியில் 39 பேரையும் சடலமாக்கி விட்டு போனது. 4500 வாகனங்களும்,  10 ஆயிரம் படகுகளும் சேதமாகின. 150 கோடி ரூபாய் மதிப்பிலான சேதாரங்களை தானே  விலாசி விட்டுப்போனது.strom

தானேவுக்கு முன்னே வந்த ஆபத்தான பேரழகி லைலா. 2010 மே மாதம் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் தலைவிரி கோலமாடினாள் லைலா. நிமிடத்திற்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த லைலா 65 உயிர்களை காவுவாங்கினாள். தமிழகத்தில் பறிபோனது 9 உயிர்கள். தமிழகம் மீது கருணை கொண்ட லைலா இலங்கையிலும், அண்டை மாநிலமான ஆந்திராவிலும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இரு பகுதிகளும் 54 உயிர்களை குடித்து விட்டு காற்றோடு கலந்து விட்டாள். strom

அதை விட ஆக்ரோஷமாக பெனிசுலாவில் இருந்து கிளம்பி இந்தியப்பெருங்கடலில் இருந்து வரேன் பார்  2016 டிசம்பர் 11ம் தேதி வந்தது வர்தா... மணிக்கு 130 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த வர்தா 23 உயிர்களை சுருட்டிக் கொண்டது.  சென்னையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வேரோடு பிடிங்கிப்போட்டது. 10 ஆயிரம் ட்ரன்ஸ்ஃபார்மர்கள் பீஸ் பீஸாகி போயின. 224 சாலைகள் துண்டாகிப்போயின. 77 மாடுகள் பலியாயிம. 50க்கும் மேற்பட்ட குழுக்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வர்தா சேதப்படுத்தி செலவழித்து விட்டுப்போன தொகை 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய். strom

கஜா வர்றாண்டா என கர்ஜனையோடு 2018ல் மலாயில் உள்ள ’டிட்லி’யில் இருந்து கிளம்பி இந்தப்பெருங்கடல் வழியாக தகிடுதித்தோம் போட்டு தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை தரைமட்டமாக்கியது கஜா. 

110 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா கஜா காட்டிப்போனது. கஜா புயலின் போது நாகபட்டினத்தில் பதிவான மழையின் உச்சபட்ச அளவு 48.4 மில்லி மீட்டராக பதிவாகி இருந்தது.  ஒரு லட்சம் மின் மரங்கள்  ஆயிரம் ட்ரான்ஸ்ஃபார்கள், 5000 படகுகள், 56 ஆராயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமாயின. 45 பேர் உயிர்கள் பறிபோயின. 18 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் வேறோடு சாய்ந்தன.

 strom

அதற்கே டெல்டா மாவட்டங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் சின்னாபின்னமாகி இன்று வரை மீளமுடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் 30ம் தேதி வர உள்ள புயலில் 115 முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியையும், பதற்றையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம் இந்த புயல்களுக்கெல்லாம் பாட்டன் இந்தப்புயல். 60 ஆண்டுகளில் இந்தப்புயலை போல இதுவரை தமிழகம் சந்தித்ததே இல்லை எனக் கூறப்படுகிறது. strom

இதுவரை தமிழகத்தில் பதிவான மழையின் அளவு 100 மில்லி மீட்டரை தாண்டியது இல்லை. இப்போது 204 மில்லி மீட்டர் வரை பதிவாகும் என அபாய சங்கை ஊதி இருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். ஆக தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கப்போவது உறுதி என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.  

Thijai Thu, 04/25/2019 - 19:11
cyclone rain storm thane cyclone vardha cyclone Cyclone தமிழகம்

English Title

Risk storm over 60 years

News Order

0

Ticker

1 
கோப்புப்படம்

தில்லி கழிப்பறைகளை ஆய்வு செய்ய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்திலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைக்கப்படவேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கழிப்பறை ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்ttv dhinakaran

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.... எடப்பாடியை மிரட்டும் டி.டி.வி.தினகரன்..!

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவல் துறை உயர் அதிகாரியை பெயரளவில் கூட பணியிட மாற்றம் செய்ய எடப்பாடி பழனிசாமியின் அரசு ஆர்வம் காட்டவில்லை.


Cyclone

60 ஆண்டுகளுக்கு பிறகு மாபெரும் அபாயம்... 2 நாட்கள் வீடுகளுக்குள் முடங்கப்போகும் தமிழகம்..!

28ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். 29ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்யும். 30, மே-1ம் தேதி தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட...


புயல் பாதிப்பு

ஒக்கி, கஜாவுக்கு பிறகு ஃபனி புயல்; கடற்கரையோர மாவட்டங்கள் உஷார்?!..

மனிதகுலம் இயற்கை சீற்றத்துக்கு எதிராக போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒக்கி புயல், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தும், இழப்பில் இருந்தும் மக்கள் மீளாத நிலையில்,...


ஜெயலலிதா (கோப்புப்படம்)

ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா?

ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.900 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது


4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம்; தொண்டர்கள் உற்சாகம்!

சென்னை: தமிழகத்தில் எஞ்சியுள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அத்தொகுதியில் அபார வெற்றி பெற்றார். மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்த அவர், அதன் பொதுச்செயலாளாரக இருந்து வந்தார். எனினும், அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாமல் இருந்தது.

ttv cooker

இதையடுத்து, மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், எதிர்பார்த்தது போலவே அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமமுக-வை கட்சியாக பதிவு செய்யாததால் அவருக்கு பொது சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையத்தின் கூற்றை நீதிமன்றம் ஏற்றது.

இருப்பினும், கடும் சட்ட போராட்டத்துக்கு பின்னர் பரிசுப் பெட்டி சின்னத்தை பொதுச் சின்னமாக டிடிவி தினகரன் பெற்றார். தொடர்ந்து, நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டனர்.

அதேபோல், நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தரப்பு உறுதியளித்தது. அதன்படி, தினகரன் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு அமமுக-வை கட்சியாக பதிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

election commission

இதனிடையே, தமிழகத்தில் விடுபட்ட அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மே மாதம் 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜ், சூலூர் தொகுதியில் கே சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது ஆகியோர் அமமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அதேசமயம், இந்த தொகுதிகளுக்கும் தங்களுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தையே ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு, நடைபெற உள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான சின்னமாக பரிசு பெட்டகத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், அமமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் வாசிங்க

மு.க.அழகிரிக்கு அதிரடியாக ஆப்பு வைத்த பாஜக... அஞ்சாநெஞ்சனை அலறவிடும் பகீர் பின்னணி இதுதான்..!

smprabu Wed, 04/24/2019 - 20:15
by elections Election Commission ammk TTV Dhinakaran gift box கோப்புப்படம் தேர்தல் களம் தேர்தல் செய்திகள் தமிழகம்

English Title

Gift Box symbol for TTV Dhinakaran's AMMK for by elections in four assembly constituencies

News Order

0

Ticker

0 
மு.க.அழகிரி

மு.க.அழகிரிக்கு அதிரடியாக ஆப்பு வைத்த பாஜக... அஞ்சாநெஞ்சனை அலறவிடும் பகீர் பின்னணி இதுதான்..!

தமிழகத்தில் தேர்தல் முடிந்த ஆறே நாட்களில் மு.க.அழகிரி மகனின் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையை ஏவிவிட்டு முடக்கியுள்ளது மோடி அரசு.


கோப்புப்படம்

டிக் டாக் செயலிக்கான தடை நிபந்தனைகளுடன் நீக்கம்; உயர் நீதிமன்ற கிளை அதிரடி!

இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக...


பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..! தேமுதிகவுக்கு வந்த சோதனை..!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் முடிந்து விட்டதால் மீண்டும் ப்ளைட் பிடித்து சிகிச்சைக்காக கிளம்ப இருக்கிறார். இந்த நேரத்தில் தான் பொல்லாத பரிதா...


இலங்கை குண்டுவெடிப்பு

பொய் செய்தி பரப்பிய டைம்ஸ் ஆப் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும்; தமிழக தவ்ஹீத் ஜமாத் இயக்கம்?!

தீவிரவாதத்துக்கு எதிராய் சமீப காலமாக நாங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறோம். இஸ்லாமிய இளைஞர்கள் பலரும் தீவிரவாத சித்தாந்தத்தால் தங்கள் அமைதியான வாழ்க்கையை தொலைத்துவிட்டு அலை...


கோப்புப்படம்

மு.க.அழகிரி மகனின் ரூ.40 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி!

மதுரை கீழவளவில் கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது பாம்பு

வாக்கு எந்திரத்தை அடுத்து ஏடிஎம் இயந்திரத்துக்குள்ளும் பாம்பு...அடுத்தது எங்க...!

மக்கள்  நடமாட்டம் உள்ள ஏ.டி.எம். ஒன்றில்  பாம்பு ஒன்று இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணபிரியா

’தினகரன் பொதுச்செயலாளரானது சசிகலாவின் ஒப்புதலுடன் நடக்கவில்லை’...இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பகீர்...

அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் பதவியேற்றுக்கொண்டது

2018 TopTamilNews. All rights reserved.